Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கைவிரிக்கும் ஹீரோக்கள்… தனது கதையின் பார்ட் 2 திட்டம் போடும் பாண்டிராஜ்!

கைவிரிக்கும் ஹீரோக்கள்… தனது கதையின் பார்ட் 2 திட்டம் போடும் பாண்டிராஜ்!
, சனி, 8 ஏப்ரல் 2023 (15:01 IST)
இயக்குனர் பாண்டிராஜ் தமிழ் சினிமாவின் முக்கியமான கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவர். பசங்க படத்தின் மூலம் அறிமுகமான அவர் அடுத்தடுத்து இயக்கிய கடைகுட்டி சிங்கம், நம்ம வீட்டுப் பிள்ளை போன்ற திரைப்படங்கள் பெரியளவில் வெற்றியைப் பெற்றன. கடைசியாக அவர் இயக்கிய எதற்கும் துணிந்தவன் திரைப்படம் சமீபத்தில் ரிலீஸ் ஆனது. அந்த பட எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால் அடுத்து ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் இருக்கிறார்.

இந்நிலையில் பல ஹீரோக்களுக்கு அவர் கதை சொல்லி, எதுவும் நடக்காததால் இப்போது 2010 ஆம் ஆண்டு தன்னுடைய இரண்டாவது படமாக வந்த வம்சம் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இரண்டாம் பாகத்திலும் அருள்நிதியே ஹீரோவாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதுவரை இல்லாத தொகைக்கு இந்தியன் 2 படத்தை வாங்க துடிக்கும் பிரபல ஓடிடி