2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக்கத்தில் உள்ளது.லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார் மற்றும் கங்கனா ரனாவத் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். மரகதமணி இசையமைக்கிறார். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக மைசூரில் உள்ள ஒரு அரண்மணையில் படமாக்கி வருகிறார் பி வாசு. படத்தில் சந்திரமுகியாக நடிக்க பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஒப்பந்தம் ஆகியுள்ளார். படத்தில் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளை இயக்குனர் வாசு படமாக்கி முடித்துள்ளார்.
இந்நிலையில் இந்த படத்துக்குப் பிறகு பி வாசு இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க கங்கனா ரனாவத் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் பேன் இந்தியா படமாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.