Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாராஜா பட இயக்குனருக்கு BMW காரைப் பரிசாக அளித்த தயாரிப்பாளர்!

Webdunia
திங்கள், 7 அக்டோபர் 2024 (08:53 IST)
விஜய் சேதுபதியின் 50 ஆவது படமான மகாராஜா ஜூன் 12 ஆம் தேதி ரிலீஸாகி பிளாக்பஸ்டர் ஹிட்டானது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவருக்கு ஒரு ஹிட் படமாக அமைந்தது மகாராஜா. இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ் நட்டி மற்றும் பாய்ஸ் மணிகண்டன் மற்றும் சிங்கம்புலிஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

கடந்த காலங்களில் விஜய் சேதுபதியின் எந்த படமும் தொடாத வசூல் சாதனையை மகாராஜா செய்துள்ளது. இந்த படம் திரையரங்குகள் மூலமாக மட்டுமே 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இந்நிலையில் இந்த படம் சில தினங்களுக்கு முன்னர் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி பல நாடுகளில் நம்பர் 1 இடத்தில் ட்ரண்டிங்கில் இருந்தது. அதன் பின்னர் நெட்பிளிக்ஸ் தளத்தில் அதிகமாகப் பார்க்கப்பட்ட இந்தியப் படங்களின் வரிசையில் முதலிடத்துக்கு சென்றது. நெட்பிளிக்ஸில் இந்த படம் 150 கோடி ரூபாய்க்கு மேல் லாபத்தை ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து சமீபத்தில் இந்த படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி நடந்த நிலையில் இயக்குனர் நித்திலனுக்கு விலையுயர்ந்த BMW காரை பரிசாக அளித்துள்ளார் தயாரிப்பாளர். இது சம்மந்தமான புகைப்படத்தைப் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் இயக்குனர் நித்திலன். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படப்பிடிப்பை முடித்த சூர்யா 44 படக்குழுவினர்… பொங்கல் ரிலீஸா?

பிக்பாஸ் வீட்டில் இருந்து முதல் நாளே வெளியேறும் போட்டியாளர்.. அதிரடி ஆரம்பம்..!

குட் பேட் அக்லிக்காக கெட்டப்பை மாற்றிய அஜித்… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

பீஷ்மர் ரஞ்சித்தா? கவுண்டம்பாளையம் ரஞ்சித்தா?... ஒரிஜினல் யார்? –விஜய் சேதுபதி நச் கேள்வி!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments