Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாமன்னன் படப்பிடிப்புத் தளத்தில் மிஷ்கின்… வைரலாகும் புகைப்படங்கள்!

மாமன்னன் படப்பிடிப்புத் தளத்தில் மிஷ்கின்… வைரலாகும் புகைப்படங்கள்!
, சனி, 4 ஜூன் 2022 (14:30 IST)
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் மாமன்னன் திரைப்படத்தின் படப்பிடிப்பு சேலம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வருகிறது.

இயக்குனர் மாரி செல்வராஜ் கர்ணன் படத்தின் வெற்றிக்குப் பிறகு இப்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது. முதல் கட்ட படப்பிடிப்பில் வடிவேலு சம்மந்தப்பட்ட காட்சிகள் பெருமளவில் படமாக்கப்பட்டுள்ளன.

இப்போது மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து வருகிறது. இந்நிலையில் மாமன்னன் படப்பிடிப்பில் முக்கிய வேடத்தில் நடிக்கும் பஹத் பாசில் கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில் தற்போது படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் மாரி செல்வராஜோடு, இயக்குனர் மிஷ்கின் மற்றும் பஹத் பாசில் ஆகியோர் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

AK 61 படப்பிடிப்புத் தளத்தில் அஜித்… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்!