இந்தியன் டிரம்ப் என விமர்சித்து ட்வீட்டிய துருவங்கள் 16 பட இயக்குனர் கார்த்திக் நரேனை ட்விட்டரில் பிளாக் செய்துள்ளார் பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி.
பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உலக நாயகன் கமலை ட்விட்டரில் விமர்சித்திருந்தார். சுவாமியின் ட்வீட்டை பார்த்த துருவங்கள் 16 பட இயக்குனர் கார்த்திக் நரேன் அவருக்கு பதில் அளித்து ட்வீட்டினார்.
அதில் தன்னை இந்தியன் டிரம்ப் என விமர்சித்த கார்த்திக் நரேனை சுப்பிரமணியன் சாமி ட்விட்டரில் பிளாக் செய்துள்ளார்.
சு. சுவாமி தன்னை ட்விட்டரில் பிளாக் செய்ததை நரேன் பிரிண்ட் ஸ்கிரீன் எடுத்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு, என்ன சார் நீங்க! இப்போ தான டைட்டில் கார்டே போட்டா அதுக்குள்ள பயந்தா எப்படி? என கிண்டல் செய்துள்ளார்.