கிடப்பில் போடப்பட்டதா ஹரி & பிரசாந்த் இணையவிருந்த படம்?

vinoth
செவ்வாய், 7 அக்டோபர் 2025 (09:46 IST)
பிரசாந்த் நடிப்பில் அவரின் தந்தை தியாகராஜன் இயக்கியுள்ள அந்தகன் திரைப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தெதி திரையரங்குகளில் ரிலீஸாகி சுமாரான வெற்றியைப் பெற்றது. அந்தகன் படத்தில் பிரசாந்துடன், பிரியா ஆனந்த், சிம்ரன், சமுத்திரக்கனி, வனிதா விஜயகுமார் மற்றும் கார்த்திக் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் அந்தாதூன் என்ற இந்தி படத்தின் ரீமேக்.

நீண்ட நாட்களாக மார்க்கெட்டில் இல்லாத பிரசாந்த், இந்த படம் தனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதையடுத்து இயக்குனர் ஹரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இவர்கள் இருவரும் இணைந்து 23 ஆண்டுகளுக்கு முன்னர் ‘தமிழ்’ என்ற வெற்றிப் படத்தில் பணியாற்றி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்துக்கான கதை விவாதம் சில மாதங்களாக நடந்த நிலையில் தற்போது அந்த படம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் இயக்குனர் ஹரி சொன்ன கதை பிரசாந்த் தரப்பினருக்கு முழு திருப்தி அளிக்கவில்லையாம். அதனால் தற்போது வேறொரு படத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எழுச்சி அடைந்த எதிர்நீச்சல்.. சிங்கப்பெண்ணுக்கு சறுக்கல்.. சிறகடிக்க ஆசைக்கு என்ன ஆச்சு.. டிஆர்பி தகவல்..!

ராஷி கண்ணாவின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல்!

கலர்ஃபுல் உடையில் கவர்ந்திழுக்கும் கீர்த்தி சுரேஷ்… க்யூட் ஆல்பம்!

இரண்டு வாரத்தில் 700 கோடி ரூபாய் வசூல்… அசத்திய காந்தாரா 1!

சூர்யா பட இயக்குனரோடு கைகோர்க்கும் விஜய் தேவரகொண்டா!

அடுத்த கட்டுரையில்
Show comments