Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டரை இடிக்கும் பணிகள் தொடக்கம்!

Advertiesment
கொரோனா

vinoth

, வியாழன், 25 செப்டம்பர் 2025 (13:14 IST)
மத்திய சென்னை சென்னை மக்களின் குறிப்பாக நடுத்தர வர்க்க மக்களின் தியேட்டராக இருந்து வந்த ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டர் கொரோனா பெருந்தொற்று காலத்தில் மூடப்படுவதாக அறிவிக்கபப்ட்டது. இந்த தியேட்டரில் டிக்கெட் விலையே 40 முதல் 60 ரூபாய் வரைதான் இருந்தது.  இந்த தகவல் சினிமா ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக செயல்படாமல் இருந்தது.

சென்னையின் மத்திய பகுதியான வடபழனியில், ஏவிஎம் ஸ்டுடியோ அருகிலேயே இருக்கும் ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டர், கடந்த 1970 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. தமிழ் சினிமாவில் மைல் கல் படங்களாக அமைந்த பல திரைப்படங்கள் இந்த தியேட்டரில் வெள்ளி விழாக் கண்டவைதான்.

ஆனால் சமீபகாலமாக அதை நிர்வகிப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அதை அகற்றிவிட்டு திருமண மண்டபம் கட்ட முடிவெடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் தற்போது அந்த திரையரங்கை இடிக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தன் மார்க்கெட்டை விட பல மடங்கு செலவு செய்து ‘கில்லர்’ படத்தை உருவாக்கும் எஸ் ஜே சூர்யா!