ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றில் சசிகலா கதாபாத்திரத்தை நீக்கிய இயக்குனர்!

வியாழன், 5 செப்டம்பர் 2019 (15:45 IST)
கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு வெப்சீரிஸில் முக்கிய கதாபாத்திரமான சசிகலாவின் கதாபாத்திரம் இடம்பெறவில்லை.  


 
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை வெப் சீரிஸாக இயக்குனர் கௌதம் மேனன் இயக்கி வருகிறார். இப்படம் ஜெயலலிதாவின் குழந்தை பருவத்தில் துவங்கி இளமை பருவம், கதாநாயகியாக திரைப்படங்களில் நடிக்கும் காட்சிகள், .கட்சி கொள்கை , அரசியல் , அமைச்சர், முதலமைச்சர், இறப்பு என அத்தனையும் உள்ளடக்கி உருவாகவுள்ள இப்படத்திற்கு "குயின்"  என்று டைட்டில் வைத்துள்ளனர். 
 
குழந்தை பருவ ஜெயலிதாவாக விஸ்வாசம்படத்தில் அஜித்தின் மகளாக நடித்து புகழ் பெற்ற அனிகா நடிக்க,  சோபன்பாபு கதாபத்திரத்தில் வம்சி கிருஷ்ணா நடிக்கிறார். எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் பிருத்விராஜின் சகோதரர் இந்திரஜித்  நடிக்கிறார். ஆனால் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரமாக எதிர்பார்க்கப்படும் சசிகலா கதாபாத்திரம் இல்லை என கூறுகிறார்கள்.  இப்படத்தின் படப்பிடிப்புகள் ஏ.வி.எம் ஸ்டூடியோவில் உள்ள கார்டனில் போயஸ் கார்டன் போல் செட் அமைக்கப்பட்டு படம்பிடிக்கவுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் ரிலீசுக்கு வாய்ப்பில்லை?... மீண்டும் சிக்கலில் எனை நோக்கி பாயும் தோட்டா!