Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நயன்தாரா? லிங்குசாமி இயக்குகிறார்

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நயன்தாரா? லிங்குசாமி இயக்குகிறார்
, புதன், 24 அக்டோபர் 2018 (08:29 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்குனர் இமயம் பாரதிராஜா, பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய் மற்றும் பெண் இயக்குனர் பிரியதர்ஷினி ஆகியோர் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. இதில் பிரியதர்ஷினி இயக்கவுள்ள திரைப்படத்திற்கு 'தி அயர்ன் லேடி' என்று டைட்டில் வைக்கப்பட்டு ஜெயலலிதா வேடத்தில் நித்யாமேனன் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெயானந்த் திவாகரன் தனது ஃபேஸ்புக்கில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை தாங்கள் தயாரிக்கவிருப்பதாகவும், இந்த படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்குவார் என்றும் கூறியுள்ளார். ஜெயானந்த் இதுகுறித்து மேலும் கூறியதாவது: அம்மாவின் வாழ்க்கை வரலாறு தனித்துவம் கொண்ட இயக்குநர் எனது நண்பர் திரு.லிங்குசாமி அவர்களால் படமாக்கப்படும். இதில் நடராஜன் மற்றும் சின்னம்மாவின் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். தமிழக அரசியல் தலைவர்களுடன் இயக்குநர் பல செய்திகளின் உண்மைத் தன்மை அறிந்து தகுந்த ஆதாரங்களுடன் இப்படம் எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

webdunia
எனவே இந்த படம் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக இருந்தாலும், சசிகலா கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் என தெரிகிறது. மேலும் இந்த படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் நயன்தாராவும், சசிகலா கேரக்டரில் முன்னணி நடிகை ஒருவரும் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்முறையாக போலந்து நாட்டில் சாதனை செய்யும் 'சர்கார'