Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிவகார்த்திகேயனின் ஹிட் பட இயக்குனர் வீட்டில் நடந்த சோகம்!

சிவகார்த்திகேயனின் ஹிட் பட இயக்குனர் வீட்டில் நடந்த சோகம்!
, திங்கள், 28 செப்டம்பர் 2020 (15:40 IST)
சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷை வைத்து படங்கள் இயக்கிய துரை செந்தில்குமாரின் தந்தை உயிரிழந்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய கமர்ஷியல் வெற்றி படமாக அமைந்த திரைப்படம் எதிர்நீச்சல் திரைப்படம். அந்த படத்தை இயக்கியவர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான துரைசெந்தில்குமார். அதன் பின் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து காக்கிச் சட்டை திரைப்படத்தை இயக்கினார்.

அதன் பிறகு தனுஷை வைத்து கொடி மற்றும் பட்டாஸ் ஆகிய படங்களை இயக்கினார். இந்த படங்கள் எதுவும் சரியாக ஓடாததால் அடுத்து மீண்டும் தனுஷே அவருக்கு வாய்ப்புக் கொடுத்து ஒரு படத்தை இயக்கும்படி கேட்டிருந்தார். இந்நிலையில் இப்போது துரை செந்தில்குமாரின் தந்தை உடல்நலக் குறைவு காரணமாக காலமாகியுள்ளார். இதையடுத்து நண்பர்களும் உறவினர்களும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’’இவர்கள் ‘’இன்றி இந்திய சரித்திரம் கிடையாது – கமல்ஹாசன் டுவீட்