இயக்குனர் ஷங்கரின் மகனும் அடுத்து திரையுலகில் நடிகராக அறிமுகமாக உள்ளதாக சொல்லப்படுகிறது.
இயக்குனர் ஷங்கர் தென்னிந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவர். இப்போது இந்தியன் 2, ராம்சரண் படம் மற்றும் அந்நியன் ரீமேக் என மூன்று படங்களில் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் ஷங்கரின் மகனான அர்ஜித் நாயகனாக சினிமாவில் நடிக்க உள்ளாராம். இவர் அமெரிக்காவில் சினிமா இயக்கம் சம்மந்தமான படிப்பு ஒன்றை முடித்துள்ளாராம்.
இந்நிலையில் அர்ஜித் கதாநாயகனாக நடிக்க உள்ள படத்தை ஷங்கரின் உதவியாளரான பாலாஜி சக்திவேல்தான் இயக்க உள்ளாராம். அந்த படம் காதல் 2 ஆக இருக்க அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.