தமிழ் சினிமாவில் பாலா அளவுக்கு மதிக்கப்பட்ட இயக்குனர் சமீபகாலத்தில் யாரும் இருக்க முடியாது. அந்த அளவுக்கு அவர் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் ஆர்வம் காட்டினார்கள். ஆனால் சமீபகாலமாக அவர் படங்கள் பெரியளவில் வெற்றி பெறவில்லை. அதுமட்டுமில்லாமல் அவர் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாக்கிய வர்மா படம் திருப்தியளிக்கவில்லை என சொல்லி அதை கிடப்பில் போட்டது அவருக்கு பெருத்த அவமானமாக அமைந்தது.
அதன் பின்னர் இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான வணங்கான் திரைப்படத்தில் இருந்தும் சூர்யா விலக தற்போது அப்படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்தார். மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில், ரோஷினி ஹர்ப்ரியன், சமுத்திரக்கனி மற்றும் மிஷ்கின் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தை இயக்குனர் பாலா மற்றும் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் இணைந்து தயாரித்து வருகின்றனர். படம் முடிந்து பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. ஜனவரி 10 ஆம் தேதி படம் ரிலீஸாகிறது.
இதையடுத்து பாலா அளித்த ஒரு நேர்காணலில் அவர் இயக்கத்தில் நடித்த ஹீரோக்கள் பற்றி பேசியுள்ளார். அதில் மற்றவர்கள் பற்றி எல்லாம் கருத்து தெரிவித்த பாலா விக்ரம் பற்றி கேட்டபோது நீண்ட யோசனைக்குப் பிறகு “எவ்வளவு யோசிக்க வேண்டிருக்கு பாத்தீங்களா? அதுதான் பதில்” எனக் கூறியுள்ளார்.