Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜெயம் ரவியின் இரண்டு படங்களை இயக்கும் இயக்குனர்… நன்றி தெரிவித்து நெகிழ்ச்சி!

Advertiesment
ஜெயம் ரவியின் இரண்டு படங்களை இயக்கும் இயக்குனர்… நன்றி தெரிவித்து நெகிழ்ச்சி!
, சனி, 2 ஏப்ரல் 2022 (09:45 IST)
இயக்குனர் அஹமது இயக்கத்தில் ஜெயம் ரவி அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க உள்ளார்.

ஜெயம் ரவி சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிக்க ஒப்பந்தமான திரைப்படம் ஜனகணமன’. இந்த படத்தை ’என்றென்றும் புன்னகை’ இயக்குனர் அகமது இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் டாப்ஸி, ஈரான் நடிகை  ல்னாஸ் நோரோஸி, ஆக்சன் கிங் அர்ஜுன், கேஜிஎப் வில்லன் ராம், மற்றும் ’செக்கச் சிவந்த வானம்’ நடிகை டயானா எரப்பா உள்ளிட்டோர் நடித்தனர்.

இந்த படத்துக்காக சில வெளிநாடுகளுக்கு சென்று இயக்குனர் அகமது படப்பிடிப்பை நடத்தினார். ஆனால் கொரோனா காரணமாக மீண்டும் படப்பிடிப்புக்கு வெளிநாடு செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளதால் பாதிக்கும் மேல் படப்பிடிப்பு முடிந்த இந்த படத்தை அப்படியே கிடப்பில் போட்டுள்ளனர்.

அதற்கு முன்பாக மீண்டும் ஒரு படத்தில் இணைந்துள்ளனர். அந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. அதே போல கிடப்பில் போடப்பட்டுள்ள ஜன கன மன திரைப்படமும் விரைவில் இந்த படப்பிடிப்பு தொடங்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் அஹமதுவின் பிறந்தநாளை முன்னிட்டு சமீபத்தில் ஜெயம் ரவி வாழ்த்துகளைப் பகிர்ந்திருந்தார்.

அதற்கு பதிலளித்துள்ள அஹமது ‘நம்பிக்கை, அன்பு மற்றும் மரியாதையை அளிக்கும் மனிதர்களை சந்திப்பது கடினமானது. இந்த அனைத்தும் கொண்ட ஜெயம் ரவிக்கு நன்றி. அடுத்தடுத்து இரண்டு படங்கள். நீங்களே பெஸ்ட் ரவி’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெங்கட் பிரபுவோடு விண்டேஜ் புகைப்படத்தப் பகிர்ந்த அசோக் செல்வன்… emotional பதிவு!