Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேம்சேஞ்சர் படுதோல்வி… மீண்டும் இணையும் தில் ராஜு & ராம்சரண்!

vinoth
புதன், 2 ஜூலை 2025 (09:20 IST)
ஆர் ஆர் ஆர் படத்துக்குப் பிறகு ராம்சரண் நடிப்பில் உருவான கேம்சேஞ்சர் படத்தை ஷங்கர் இயக்க தில் ராஜூ தயாரித்து சங்கராந்தியை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி ரிலீஸ் செய்தனர். இந்த படத்துக்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதியிருந்தார். படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்க, தமன் முதல் முதலாக ஷங்கர் படத்துக்கு இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்திருந்தார்.

படம் மிக அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி ரிலீஸானது. ஆனால் ரிலீஸுக்குப் பிறகு பயங்கரமான எதிர்மறை விமர்சனங்களைப் பெற்று இணையத்தில் ட்ரோல் ஆனது. படுமோசமான வசூலைப் பெற்று தோல்விப் படமாக அமைந்தது. இதனால் ராம்சரணுக்கு ஒரு வெற்றிப்படம் கொடுக்க முடியவில்லை என்ற வருத்தம் உள்ளதாக சமீபத்தில் தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தம்முடு படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் “மீண்டும் ராம்சரணோடு ஒரு சூப்பர் ஹிட் படத்துக்காக இணையவுள்ளோம். அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன” என அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முடிந்தது இராமாயணம் முதல் பாக ஷூட்டிங்! படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்த ரன்பீர்!

மாரி செல்வராஜ் ஷாருக் கானை வைத்துப் படம் இயக்க வேண்டும்- இயக்குனர் ராம் ஆசை!

கவின் - நயன்தாரா படத்தின் டைட்டில் இதுவா? டைட்டிலே வித்தியாசமா இருக்குதே...!

அஜித்தின் அடுத்த படத்தை சிவாஜி புரடொக்சன்ஸ் தயாரிக்கின்றதா? மருமகன் ஆதிக் முயற்சி?

சிம்பு - வெற்றிமாறன் படத்தில் இணையும் மணிகண்டன்.. எப்படி ஒப்புக்கொண்டார்?

அடுத்த கட்டுரையில்
Show comments