குறுகலான சாலைகள் கொண்ட சென்னை மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசல் என்பது மிகவும் முக்கியமான பிரச்சனை. போக்குவரத்து நெரிசலுக்கு சாலையின் இருபுறங்களிலும் நிறுத்திவிட்டு செல்லப்படும் வாகனங்களும் பிரதான காரணமாகும்.
இதனை கண்டறிந்த அதிகாரிகள் சென்னையில் வாகன நிறுத்தத்தை முறைப்படுத்த வெளிநாடுகளில் உள்ளது போல் டிஜிட்டல் பார்க்கிங் சிஸ்டம் கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் உள்ள முக்கிய சாலைகளின் அருகே அருகே மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களிலும் கண்காணிப்பு கேமராவுடன் டிஜிட்டல் பார்க்கிங் அமைக்கப்பட உள்ளது.
முதற்கட்டமாக சென்னை அண்ணாநகர் ,மெரினா, புரசைவாக்கம் ,பெசன்ட் நகர், ஆகிய இடங்களில் டிஜிட்டல் பார்க்கிங் அமைக்கப்பட உள்ளது. மிகப்பெரிய மால்கள் , முக்கிய சாலைகளின் சந்திப்புகள் சந்திப்புகள் வணிக நிறுவனங்கள் ஆகிய பகுதிகளில் மொத்தம் 12 ஆயிரம் கார்கள் , இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த சேவையை பயன்படுத்த விரும்பும் வாகன ஓட்டிகள் GCC என்ற செயலியை தங்கள் மொபைல் போனில் ன பதிவிறக்கம் செய்து வங்கி விவரங்களுடன் பதிவு செய்துகொள்ள வேண்டும். பயணத்தில் செல்ல விரும்பும் இடங்களில் எந்த பகுதியில் காரை நிறுத்த வேண்டுமோ அந்த பகுதியில் நமக்கான இடங்களை இந்த ஆப் காட்டும்.
அங்கு ஒரு மணி நேரத்திற்கு இருசக்கர வாகனத்திற்கு ஐந்து ரூபாயும் நான்கு சக்கர வாகனத்திற்கு 200 ரூபாயும் கட்டணமாக விதிக்கப்படும். விருப்பம் போல் எப்போது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நமது வாகனத்தை எடுத்துச் செல்லலாம். கட்டணை பரிவர்த்தனை முழுவதும் ஆன்லைன் வசதி மூலம் என்பது குறிப்பிடத்தக்கது.