Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னை-தூத்துகுடி 10 வழிச்சாலை: மத்திய அரசு முடிவு

Advertiesment
சென்னை-தூத்துகுடி 10 வழிச்சாலை: மத்திய அரசு முடிவு
, சனி, 19 ஜனவரி 2019 (13:24 IST)
சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த நிலையில் இந்த திட்டத்திற்கு நிலம் தர விவசாயிகள் மறுப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியது தெரிந்ததே

இந்த நிலையில் மத்திய அரசு சென்னையில் இருந்து தூத்துகுடி வரை 10 வழிச்சாலை ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளது.  : சென்னை - தூத்துக்குடி வரையிலான இந்த 10 வழிச்சாலை சுமார் ரூ13,200 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ளது.

சென்னையில் இருந்து விழுப்புரம் வரை இந்த சாலை 10 வழியாகவும், விழுப்புரத்தில் இருந்து தஞ்சாவூர், திருச்சி வரை 8 வழியாகவும் அதன் பின் திருச்சியில் இருந்து தூத்துகுடி வரை 6 வழிச்சாலையாகவும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய சாலையால் சென்னை - தூத்துக்குடி வரையிலான தூரம் 100 கி.மீ. வரை குறையும் என்றும் பயண நேரமும் சுமார் 2 மணி நேரம் குறையும் என்றும், சென்னைக்கும் தூத்துகுடிக்கும் இடையிலான வர்த்தகங்கள் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எதிர்பாராதது: பதவி விலகினார் டிரம்ப்; அமெரிக்காவில் பரபரப்பு!