சமூக சீர்திருத்தவாதியான ஜோதிராவ் புலேவின் வாழ்க்கை வரலாற்று படத்தை வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து இந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.
மகாராஷ்டிராவின் சீர்திருத்தவாதியான ஜோதிராவ் புலே மற்றும் அவரது மனைவி சாவித்ரிபாய் புலே ஆகியோரின் வாழ்க்கை வரலாறு புலே என்ற பெயரில் உருவாகியுள்ளது. அனந்த் மகாதேவன் இயக்கத்தில் பிரதிக் காந்தி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் ஏப்ரல் 25ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த படத்தில் பிராமணர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வசனங்கள், காட்சிகள் காட்டப்பட்டுள்ளதால் படத்திற்கு தடை கோரி சில அமைப்புகள் பிரச்சினை செய்து வருவதால் படத்தில் சில வசனங்கள், காட்சிகளை நீக்க சென்சார் போர்டு கேட்டுக் கொண்டுள்ளது.
இதற்கு இந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள அவர், கருத்து சுதந்திரத்தோடு உருவாக்கப்படும் சந்தோஷ், தடாக் 2, பஞ்சாப் 95, டீஸ் உள்ளிட்ட பல படங்கள் வெளியாகாமல் தடை செய்யப்படுகின்றன.
தடாக் 2 திரையிடல் பிரச்சினையின்போது சென்சார் போர்டு எங்களிடம் மோடி சாதிகளை ஒழித்துவிட்டார் என்று கூறினார்கள். தற்போது பிராமணர்கள் புலே படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். மோடிதான் சாதிகளை ஒழித்துவிட்டாரே? அப்புறம் எப்படி நீங்கள் பிராமணராக இருக்கிறீர்கள்? எதற்காக படத்தை எதிர்கிறீர்கள்” என கேள்வி எழுப்பியுள்ளார்.
Edit by Prasanth.K