தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நடிகை கஸ்தூரி மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில், "தவறாக எதுவும் நான் பேசவில்லை" என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற இந்து மக்கள் கட்சியின் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கஸ்தூரி கலந்து கொண்ட போது, தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார் என்று குற்றம் சாட்டப்பட்டது. "ஒரு காலத்தில் பிராமணர் சமூகம் மேலே இருந்து விட்டோம்; எனவே எங்களை கீழே எடுத்து அசிங்கப்படுத்தாதீர்கள். நேற்று நான் பேசும்போது ஒரு சமூகத்தை தவறாக பேச சொல்லவில்லை; அமைச்சர்களாக இருக்கிறார்கள் என்று தான் பேசினேன்," என்று அவர் கூறினார்.
"அதற்காக இவ்வளவு கேள்வி கேட்பவர்கள், பிராமண சமூகத்தை ஒரு நாளும், ஒவ்வொரு நாளும் விமர்சிக்கும் போது எங்கே போனார்கள்?" என்று அவர் கேட்டுள்ளார். "பிராமணர்கள் தமிழர்கள் இல்லை என்று ஒரு சமூகத்தை கூறுவதற்கு யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. இக்கணமும் அதில் சிறந்த திராவிடமும்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.
"சில வாரங்களுக்கு முன்பாக போஸ்டர் அடித்து பட்டி தொட்டி எங்கும் பரப்பியவர்கள் தமிழ் இனத்தைச் சேர்ந்தவர்களா? ஒரிஜினலாக அவர்கள் தமிழர்கள்தானா? தமிழை தாய் மொழியாக கொண்டவர்களா?" என்று அவர் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார். "அமைச்சரவையில் தெலுங்கு பேசுபவர்கள், மலையாளம் பேசுபவர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்கும்போது, பிராமணர்களுக்கு மட்டும் ஏன் வாய்ப்பு கொடுக்கவில்லை?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
"உங்கள் வீட்டு ஆடிட்டர்கள், டாக்டர்கள், வழக்கறிஞர்கள் பிராமணர்களாக இருக்க வேண்டும், ஆனால் பிராமணர் இல்லாத அமைச்சரவை எனக் கூறி தமிழர்களின் காதில் பூச்சு சுற்ற வேண்டும்; இதுதான் திராவிடமா?" என்று கஸ்தூரி கேள்வி எழுப்பினார்.