Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் பிளான் என்ன? கௌதம் மேனனின் புதிய திட்டம்!

துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் பிளான் என்ன? கௌதம் மேனனின் புதிய திட்டம்!

vinoth

, வெள்ளி, 19 ஜனவரி 2024 (07:22 IST)
கௌதம் மேனன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம். ஆனால் பைனான்ஸ் பிரச்சனைகள் காரணமாக  2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட துருவ நட்சத்திரம் படம் பல பிரச்சனைகளைக் கடந்து நவம்பர் 24  ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பொருளாதார பிரச்சனைகள் காரணமாக ரிலீஸ் ஆகவில்லை.

துருவ நட்சத்திரம் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘ஒன்றாக என்டர்டைன்மென்ட்’ நிறுவனம் கடைசி நேரத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரிலீஸ் ஆகாது என அறிவித்தது. இதையடுத்து டிசம்பர் 1 ஆம் தேதி திட்டமிட அந்த தேதியிலும் ரிலீஸாகவில்லை.

இந்நிலையில் இப்போது இந்த படம் சம்மந்தமாக நீதிமன்றத்தில் நடக்கும் ஒரு வழக்கில் படத்தை பிப்ரவரி மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கௌதம் மேனன் தெரிவித்துள்ளாராம். அதனால் துருவ நட்சத்திரம் படத்தினைக் காண ஆவலாக இருக்கும் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூரியின் கருடன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் & கிளிம்ப்ஸ் வீடியோ ரிலீஸ் அப்டேட்!