Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விக்ரம் படத்தில் நடிக்க நாங்கள் ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை-வில்லேஜ் குக்கில் சேனல் சுப்பிரமணியன்

Advertiesment
the village cooking

Sinoj

, திங்கள், 8 ஜனவரி 2024 (16:45 IST)
சென்னை- நந்தனம்பாக்கத்தில் உள்ள வர்த்தகக் மையத்தில் நேற்று முதல் உலக முதலீட்டாளர்கள் மா நாடு நடைபெற்று வருகிறது.

இதில்,பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் தமிழகத்தில் பல ஆயிரம் கோடியில் முதலீடு செய்து, அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதுடன், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்த  நிலையில்,  இன்றைய நிகழ்வில்’ சின்ன வீரரமங்கலம் கிராமத்தில் இருந்து, தி வில்லேஜ் குக்கிங்’ சேனல்  நடத்தி வரும், அய்யனார், முத்துமாணிக்கம், முருகேசன், தமிழ் செல்வன், சுப்பிரமணியன் ஆகிய 6 பேர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் அவர்களிடம் கலந்துரையால நடைபெற்றது.

அப்போது பிராண்ட்களுக்கு பிரமோசன் அளிப்பதில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது அவர்கள் கூறியதாவது: தங்கள் சேனலில் தங்கள் வீடியோவில் புரமோசன் விளம்பரம் செய்வதில்லை என்று  சேனல் ஆரம்பிக்கும் முன்பே விதிமுறைகள் ஏற்படுத்திக் கொண்டதால் தற்போது வரை பின்பற்றி வருகிறோம் தெரிவித்துள்ளனர்.

மேலும், கமலின் விக்ரம் படத்தில் நடிப்பதற்கு  நாங்கள் ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை எனவும், சாக்லேட் நிறுவனம் ஒன்று 10  நொடி விளம்பரத்திற்கு ரூ.4.5 லட்சம் தருகிறோம் என சொன்னதை நிராகரித்துவிட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கனமழை, பேருந்து ஸ்ட்ரைக், கிளாம்பாக்கம்..! பகீர் கிளப்பும் பொங்கல் பயணம்!