‘ஆமாம் நான் வாரிசு நடிகன்தான். ஆனால்…’- துருவ் விக்ரம் பதில்!

vinoth
புதன், 22 அக்டோபர் 2025 (08:48 IST)
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் மற்றும் வாழை ஆகிய படங்களை அடுத்து மாரி செல்வராஜின் ஐந்தாவது படமாக ‘பைசன்’நேற்று ரிலீஸானது. இந்த படத்தில் துருவ் விக்ரம்மோடு அனுபமா பரமேஸ்வரன், பசுபதி, ரஜிஷா விஜயன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் அப்லாஸ் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்த படத்தைத் தயாரித்துள்ளனர்.

ஏற்கனவே இரண்டு படங்களில் நடித்திருந்தாலும் ‘பைசன்’தான் தன்னுடைய முதல் படம் என்று துருவ் விக்ரம் தெரிவித்திருந்தார். படம் ரிலீஸாகி பாராட்டுகளைக் குவித்து வருகிறது. வசூல் ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்துள்ளது. விக்ரம்முக்கு எப்படி சேது ஒரு அடையாளமாக அமைந்ததோ அது போல துருவ்வுக்கு ‘பைசன்’ அடையாளமாக இருக்கும் என கருத்துகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் துருவ் மீது வைக்கப்படும் விமர்சனங்களில் ஒன்றான வாரிசு நடிகர் என்பதற்கு அவர் முதிர்ச்சியோடு பதிலளித்துள்ளார். அதில் “ஆம். நான் வாரிசு நடிகன்தான். அதனால்தான் எனக்கு வாய்ப்புகள் கிடைக்கின்றன என்பதையும் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் மக்கள் என்னை விரும்பி ஏற்றுக் கொள்வதற்கான அனைத்தையும் செய்வேன். அதற்காகக் கடுமையாக உழைப்பேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

லோகா நேரடியாக தெலுங்கில் எடுக்கப்பட்டிருந்தால் படுதோல்வி ஆகியிருக்கும்… பிரபல தயாரிப்பாளர் கருத்து!

ஆசியக் கோப்பை வேண்டுமென்றால் என்னை வைத்து விழா நடத்துங்கள்… மோசின் நக்வி உறுதி!

பிக் பாஸ் 9: மூன்றாவது வார எலிமினேஷன் பட்டியலில் 8 பேர்!

மாடர்ன் உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

ஜொலிக்கும் விளக்கு வெளிச்சத்தில் மேலும் ஜொலிக்கும் ரகுல் ப்ரீத் சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments