Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கவர்ச்சி கன்னி... வாரி வள்ளல் - ஹேப்பி பர்த்டே தர்ஷா குப்தா!

கவர்ச்சி கன்னி... வாரி வள்ளல் - ஹேப்பி பர்த்டே தர்ஷா குப்தா!
, திங்கள், 7 ஜூன் 2021 (11:58 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக்வித் கோமாளி என்ற நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
 
குறிப்பாக குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ்பெற்ற புகழ், ஷிவாங்கி உள்ளிட்டோர் சிவகார்த்திகேயனின் டான் படத்திலும், புகழ் அருண்விஜய் மற்றும் சந்தானம் படத்திலும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
 
அந்தவகையில் விஜய் டிவியின் செந்தூரப்பூவே சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் தர்ஷா குப்தா. அவர் குக் வித் கோமாளி 2ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். ஆனால் அவர் பாதியிலேயே எலிமினேட் செய்யப்பட்டார். 
 
தொடர்ந்து இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் தர்ஷா குப்தா எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ஆக்டிவாக இருந்து வருகிறார். கூடவே நிறைய உதவி செய்யும் நலன் உள்ளமும் கொண்டவர். கொரோனா ஊரடங்கு காலத்தில் பசியுற்றோருக்கு உணவளித்து உதவி வருகிறார். 
 
உதவும் உள்ளத்திற்கு இன்று பொறந்தநாள். நீயளித்த உணவை உண்டு பசியாறிய அனைத்து உள்ளங்களின் ஆசீர்வாதமும் உன்னை மேலும் வளர வழிசெய்யும். ஹேப்பி பர்த்டே தர்ஷா... 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழர்களை இழிவுப்படுத்தும் ஃபேமிலிமேன்; அமேசானை புறக்கணிக்க வேண்டும்! – ட்விட்டரில் ட்ரெண்டிங்!