தனுஷ் இயக்கத்தில் வரலாற்றுப் படம்! இத்தனை பிரபலங்களா?

Webdunia
செவ்வாய், 9 ஜூன் 2020 (15:38 IST)
தனுஷ் நடித்து இயக்கும் அவரது அடுத்தபடத்தில் தென்னிந்திய சினிமாவைச் சேர்ந்த பிரபலங்கள் பலர் நடிக்க இருக்கின்றனர்.

தமிழ் சினிமாவில் நடிப்பு, பாடல் எழுதுதல், பாடகர், இயக்குனர் என பல துறைகளில் தனது திறமையை நிரூபித்தவர் தனுஷ். இவர் இயக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான பவர் பாண்டி கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் அடுத்ததாக தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமான படம் ஒன்றை இயக்க ஆயத்தமானார். இந்த படத்தில் அவரோடு நாகார்ஜூனா, சரத்குமார், அதிதி ராவ், எஸ்.ஜே.சூர்யா மற்றும் ஸ்ரீகாந்த்  ஆகியோர் நடிக்க இருந்தனர். ஆனால் மெர்சல் படத்தால் பல கோடி நஷ்டமடைந்த தேனாண்டாள் பிலிம்ஸ் அந்த படத்தைத் தயாரிக்க முடியாத நிலைக்கு ஆளானது.

இதையடுத்து இருவருடங்களாக தொடங்கப்படாமல் இருந்த அந்த படம் இப்போது மீண்டும் தூசு தட்டப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு தற்போது தற்காலிகமாக 'DD 2' என்று பெயரிடப்பட்டுள்ளது. தனுஷின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஷான் ரோல்டன் இசையமைக்க, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படம் கொரோனா லாக்டவுன் முடிந்ததும் தொடங்கப்படும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எஜமான் காலடி மண்ணெடுத்து.. ரஜினியின் 75வது பிறந்த நாளில் ரீரிலீஸ் ஆகும் எஜமான்..!

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments