Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனியார் மருத்துவமனைகள் வசூலிக்கும் கட்டணத்தை அரசே ஏற்குமா? சென்னை ஐகோர்ட் கேள்வி

தனியார் மருத்துவமனைகள் வசூலிக்கும் கட்டணத்தை அரசே ஏற்குமா? சென்னை ஐகோர்ட் கேள்வி
, செவ்வாய், 9 ஜூன் 2020 (13:39 IST)
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை செய்து வந்தாலும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை கட்டணத்தை மிக அதிகமாக வசூலிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன
 
இதனை அடுத்து சமீபத்தில் தமிழக அரசு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக வசூலிக்க வேண்டிய கட்டணம் குறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இதன்படி தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்காக பொது வார்டில் கிரேடு ஏ1, ஏ2க்கு நாள் ஒன்றுக்கு ரூ.7,500, கிரேடு ஏ3, ஏ4க்கு ரூ.5000, தீவிர சிகிச்சை பிரிவில் கிரேடு ஏ1, ஏ2க்கு நாள் ஒன்றுக்கு ரூ.15,000, கிரேடு ஏ3, ஏ4க்கு ரூ.15,000 அதிகப்பட்ச கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டடு
 
இந்த அறிவிப்பிலும் தனியார் மருத்துவமனையில் கட்டணங்கள் அதிகமாக இருப்பதாக பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் இது குறித்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தபோது கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனை வசூலிக்கும் கட்டணத்தை மத்திய மாநில அரசுகள் ஏற்க முடியுமா? என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த கேள்வி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதுச்சேரியிலும் பொதுத்தேர்வு ரத்து! – கல்வி அமைச்சர் அறிவிப்பு!