அஜித் நடிக்கும் படத்தை இயக்குகிறாரா தனுஷ்?... திடீரென பரவும் தகவல்!

vinoth
புதன், 5 மார்ச் 2025 (08:56 IST)
பவர் பாண்டி மற்றும் ராயன் ஆகிய படங்களை இயக்கிய தனுஷ் அடுத்து இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தேனி உள்ளிட்ட தனுஷின் சொந்த ஊர்ப் பகுதிகளில் தொடங்கி நடந்தது.  படத்தை டான் பிக்சர் தயாரிக்க, ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக கிரண் கௌஷிக் பணியாற்றுகிறார்.

இந்த படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், நித்யா மேனன் மற்றும் அருண் விஜய் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். படத்தின் பெரும்பாலானக் காட்சிகள் தேனி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டது. இன்னும் கடைசி கட்டப் படப்பிடிப்பு டெல்லி மற்றும் பாங்காங் ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட வேண்டியுள்ளது. இதற்கிடையில் தனுஷ் தான் நடிக்கும் இந்தி பட ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார். அதன் பின்னர் அவர் இளையராஜா பயோபிக் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் தனுஷ், அஜித்தை சந்தித்து அவரை வைத்து இயக்க தான் ஒரு கதை சொல்லியுள்ளதாகவும், அந்த கதையைக் கேட்டு அஜித் நேர்மறையான பதிலை சொல்லியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஒருவேளை மற்ற எல்லா விஷயங்களும் சாதகமாக அமையும் பட்சத்தில் தனுஷ் –அஜித் கூட்டணியில் ஒரு படம் உருவாகலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

அடுத்த கட்டுரையில்
Show comments