Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: தனுஷ் தம்பி மரணம்

Webdunia
வியாழன், 24 மே 2018 (17:19 IST)
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த தூப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தனது நற்பணி மன்ற தம்பிக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் தனுஷ்.

 
 
தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நேற்று முன்தினம் போராட்டக்காரர்களை கலைக்க துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
இந்நிலையில், தூத்துக்குடி தூப்பாக்கி சூட்டில் தனது நற்பணி மன்ற தம்பி உயிரிழந்துள்ளதாக நடிகர் தனுஷ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதில் “இந்த துப்பாக்கி சூட்டில் என் நற்பணி மன்ற தம்பி S.ரகு(எ)காளியப்பன் மரணம் என்னை நிலை குலைய வைத்துள்ளது.அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். வெளிநாட்டிலிருந்து வந்தவுடன் தம்பி குடும்பத்தினரை சந்திக்கிறேன். தம்பி ஆன்மா சாந்தியடைய மிகுந்த வேதனையுடன் இறைவனை வேண்டுகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
 
இந்த போராட்டத்தில் உயிரிழந்தவர்களில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவின் மைத்துனரும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெண்ணிற உடையில் செல்லப் பிராணியுடன் கொஞ்சி குலாவும் யாஷிகா ஆனந்த்!

திவ்யா துரைசாமியின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

எம்புரான் அந்த மாதிரி பிரம்மாண்ட பட்ஜெட் படம் இல்லை… இயக்குனர் பிரித்விராஜ்!

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் அடுத்த சிங்கிள் ரிலீஸ் அப்டேட்…!

தனுஷ் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் ஆரம்பக்கட்டத்தில்தான் உள்ளது- தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன்!

அடுத்த கட்டுரையில்
Show comments