தூத்துகுடியில் நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நேற்று முன் தினம் போராட்டக்காரர்களை கலைக்க துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
கலவரத்திற்கு காரணமான மாவட்ட ஆட்சியர், எஸ்.பி ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டு புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஸ்டெர்லை விவகாரத்தில் மக்கள் மாநில அரசின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில் குஜராத் மாநில முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் தூத்துக்குடி சம்பவம் குரித்து தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது, அமைதியான முறையில் போராட்டம் நடத்துபவர்களை கொல்ல வேண்டும் என்பது வேதாந்தா நிறுவனம் நடத்திய ஆபரேஷன் ஆகும்.
அதிமுகவின் செயல்பாடுகளை பார்க்கும்போது பாஜகவிடம் அவர்கள் தங்களை சரணடைந்து விட்டதாகவே தெரிகிறது. மோடி தலைமையிலான கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான இந்திய ஏழை மக்களின் போராட்டம் தமிழகத்தை எட்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.