எதிர்ப்பு தெரிவித்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை நோக்கி நேற்று காலை பேரணியாக சென்றனர்.
அவர்களை போலீசார் தடுக்க முயன்று, பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, பொதுமக்களை நோக்கி போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 11 பேர் பலியாகினர்.
இன்று மீண்டும் நடந்த போராட்டத்தில் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், 22 வயது இளைஞர் ஒருவர் மரணமடைந்தார். மேலும், பலர் காயம் அடைந்துள்ளனர். பெண்கள், மாணவர்கள் என்றும் பார்க்காமல் போலீஸ் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த மோசமான செயலால் தமிழகமே கொதித்துப் போய் உள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு வணிகர் சங்கம் கடையடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளது. தமிழகம் முழுக்க கடையடைப்பு நடந்த வணிகர் சங்கம் முடிவுசெய்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் கடையடைப்பு நடத்தப்பட உள்ளது என தமிழ்நாடு வணிகர்கள் சங்கக தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.