Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனுஷின் 56வது படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இயக்குனர், தயாரிப்பாளர் இவர்கள் தான்..!

Advertiesment
தனுஷ்

Mahendran

, வியாழன், 10 ஏப்ரல் 2025 (10:31 IST)
தனுஷின் 56வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தகவல் அவரின் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தனுஷ் தற்போது, சேகர் கம்முலா இயக்கத்தில் உருவான ‘குபேரா’ மற்றும் அவர் தானாகவே இயக்கிய ‘இட்லி கடை’ எனும் இரண்டு படங்களில் நடிப்பை முடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் விரைவில் வெளியாகும் நிலையில் உள்ளன. இதற்குப் பிறகும், ஹிந்தியில் தயாராகி வரும் ‘Tere Ishk Mein’ எனும் படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், தனுஷ் தனது 56வது படத்திற்கான அறிவிப்பை தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புதிய படத்தை ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ போன்ற விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கவுள்ளார். இந்தப் படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனலின் ஐசரி கணேஷ் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கிறார்.
 
மாரி செல்வராஜ் தற்போது துருவ் விக்ரம் நடிக்கும் ‘பைசன்’ படத்தை இயக்கி வருகிறார். அந்தப் படத்தின் பணிகள் முடிந்ததும், கார்த்தி நடிக்கும் ‘Karthi 28’ படத்தை இயக்க உள்ளார். இந்த இரு படங்களையும் முடித்த பிறகு தான் அவர் தனுஷுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
மேலும் தனுஷின் 55வது திரைப்படத்தை 'அமரன்' படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளதாகவும், அந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில வாரங்களில் தொடங்கவிருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அன்றைக்கும் இன்றைக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான்.. அஜித்துடன் நடித்தது குறித்து அர்ஜூன் தாஸ்..!