Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குனர் ஆகிறாரா விஜய் சேதுபதி… மணிகண்டன் கைவிட்ட வெப்சீரிஸ் அப்டேட்!

vinoth
செவ்வாய், 28 ஜனவரி 2025 (10:37 IST)
இயக்குனர் மணிகண்டன் இயக்கிய காக்கா முட்டை மற்றும் குற்றமே தண்டனை ஆகிய படங்கள் மிகப்பெரிய அங்கிகாரத்தை அவருக்கு பெற்றுத் தந்தன. ஆண்டவன் கட்டளை படத்துக்குப் பிறகு 3 ஆண்டு இடைவெளியில் கடைசி விவசாயி படத்தை இயக்கி வெளியிட்டார். இந்த படம் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் பாராட்டுகளைப் பெற்றது.

இதையடுத்து விஜய் சேதுபதி மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் மூன்றாவது முறையாக ஒரு வெப் சீரிஸ்க்காக இணைந்தார்கள். இந்த தொடருக்கு டிஸ்னி நிதியளிக்க முதல் பிரதி அடிப்படையில் மணிகண்டன் தயாரித்து இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் டிஸ்னி மற்றும் மணிகண்டன் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த வெப் சீரிஸில் இருந்து மணிகண்டன் விலகினார்.

இந்நிலையில் இப்போது அந்த தொடரை விஜய் சேதுபதியே தயாரித்து இயக்கவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கபப்டுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

“எல்லா அப்பாக்களும் பொய்யர்கள்தான்…” –இயக்குனர் ராமின் ‘பறந்து போ’ பட டீசர் அப்டேட்!

ராஜமௌலிக்கு ‘No’ சொன்ன விக்ரம்… மலையாள நடிகரை டிக் அடித்த படக்குழு!

கமல் மன்னிப்பு கேட்டாலும் ‘தக்லைஃப் படத்தை வெளியிட விடமாட்டோம்: கர்நாடக திரைப்பட சம்மேளனம்

தயாரிப்பாளராக கால்பதிக்கும் ரவி மோகன்… எஸ் ஜே சூர்யாவோடு முதல்முறையாகக் கூட்டணி!

அடுத்த கட்டுரையில்
Show comments