நடிகர் தனுஷ் நடித்த முதல் நேரடி தெலுங்குப் படமான வாத்தி திரைப்படம் சில மாதங்களுக்கு முன்னர் ரிலீஸாகி கவனம் பெற்றது. இந்நிலையில் தனுஷ் ஏற்கனவே ஒப்பந்தமான தெலுங்கு படத்தில் இயக்குனர் சேகர் கமுலா தற்போது நடித்து வருகிறார். குபேரா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது.
இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகார்ஜுனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் கதை 40 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு அரசியல் கதையாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் மற்றும் திருப்பதியில் நடந்தன. இதையடுத்து ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு இப்போது மும்பை தாராவி பகுதிகளில் குபேரா படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இப்போது இந்த படம் சம்மந்தப்பட்ட வீடியோ துணுக்கு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அந்தரத்தில் தொங்கியபடி தனுஷ் நடித்துக் கொண்டிருக்க அந்த் காட்சியை அவருக்கு மேல் தொங்கியபடி படமாக்குகிறார் படத்தின் கேமராமேன் நிகேத் பொம்மி.