Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முன்பதிவில் சாதனை படைத்த விஜய்யின் கோட் திரைப்படம்!

முன்பதிவில் சாதனை படைத்த விஜய்யின் கோட் திரைப்படம்!

vinoth

, செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (09:22 IST)
வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் விஜய்யின் GOAT திரைப்படம் இன்னும் 2 தினங்களில் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது விறுவிறுப்பாக பரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். யுவன் இசையமைக்க சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படம் இன்னும் 3 தினங்களில் ரிலீஸாக உள்ள நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் முன்பதிவு தொடங்கியது. விஜய் படத்தை முதல் நாள் பார்க்க விஜய் ரசிகர்கள் ஆர்வமாக இருப்பார்கள் என்ற காரணத்தால் பல திரையரங்குகளும் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு டிக்கெட்டை விற்பனை செய்து வருகின்றனர். அதுவும் டிக்கெட் விலையை அதிகாரப்பூர்வமாக அறிவித்து ஆன்லைனிலேயே விற்பனை நடக்கிறது.

இப்படி டிக்கெட் விலையை ஏற்றி விற்கும் திரையரங்குகளில் சென்னை ரோகினி திரையரங்கும் ஒன்று. ஆனாலும் அந்த திரையரங்கில் இதுவரை 25000 டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாம். இதுவரை எந்தவொரு படத்துக்கும் இவ்வளவு வேகமாக டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டதில்லை என தியேட்டர் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கவின் நடித்த ‘பிளடி பெக்கர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.. சூர்யா, சிவகார்த்திகேயனுடன் மோதல்?