Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜகமே தந்திரம் ஓடிடி ரிலீஸில் புதிய திருப்பம்: ‘மாஸ்டர்’ பாணியை தொடர முடிவு!

ஜகமே தந்திரம் ஓடிடி ரிலீஸில் புதிய திருப்பம்: ‘மாஸ்டர்’ பாணியை தொடர முடிவு!
, சனி, 30 ஜனவரி 2021 (22:44 IST)
தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜகமே தந்திரம் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகுமா? திரையரங்குகளில் ரிலீஸ் ஆகுமா? என்ற குழப்பம் கடந்த சில மாதங்களாக இருந்து வந்த நிலையில் நேற்று வெளியான தகவலின்படி ஜகமே தந்திரம் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளதாகவும் நெட்ப்ளிக்ஸ்இல் இந்த படம் ரிலீஸ் செய்வதற்காக 45 கோடி விற்பனை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது
 
இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி ஜகமே தந்திரம் திரைப்படம் முதலில் திரையரங்கிலும் அதன் பின்னர்தான் ஓடிடியில் ரிலீஸ் என்று கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் திரையரங்குகளில் ரிலீஸ் செய்த ஒரே வாரத்தில் ஓடிடியில் ரிலீஸ் செய்யவும் அனுமதிக்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது 
 
மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி 16 நாட்களில் ஓடிடியில் ரிலீஸ் செய்த அதே பாணியில் ஜகமே தந்திரம் திரைப்படம் வரும் மார்ச் மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டு அதன் பின் ஒரே வாரத்தில் ஓடிடியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹேர் கலரை மாற்றி மாஸ் புகைப்படத்தை பதிவு செய்த ஷிவானி!