Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழ் நடிகரைப் பாராட்டிய ரஹானே… எந்த படத்துக்காக தெரியுமா?

தமிழ் நடிகரைப் பாராட்டிய ரஹானே… எந்த படத்துக்காக தெரியுமா?
, சனி, 30 ஜனவரி 2021 (17:54 IST)
இந்திய டெஸ்ட் அணியின் துணைக் கேப்டன் ரஹானே சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படத்தை பார்த்து பாராட்டியுள்ளார்.

சூர்யா நடிப்பில் உருவான சூரரைப் போற்று திரைப்படம் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஓடிடியில் ரிலீஸாகி மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றது. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் பார்க்கப்பட்ட திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொள்ள உள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணி கோப்பையை வெல்லக் காரணமாக இருந்த அஜிங்க்யே ரஹானே இப்போது இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடுவதற்காக சென்னை வந்துள்ளார். அப்போது ரசிகர்களிடம் நடத்திய கேள்வி பதிலில் ‘நீங்கள் ஏதாவது தமிழ் படத்தை பார்த்துள்ளீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்தார். அதில் நான் ‘சூரரைப் போற்று திரைப்படத்தை சப்டைட்டில்களோடு பார்த்தேன். மிகச்சிறப்பான படம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவகார்த்திகேயனோடு இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்த நடிகை!