தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இரண்டாவது படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது அவரது இயக்கத்தில் உருவாகியிருக்கும் மூன்றாவது படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் தனுஷின் சகோதரி மகன் நாயகனாக நடிக்க இருப்பதாகவும் அனிகா சுரேந்திரன் நாயகியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. மேலும் இந்த படத்தில் தனுஷ் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் வரும் 24ஆம் தேதி இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தனுஷ் அல்லது சமூக வலைதளத்தில் சற்று முன் தெரிவித்துள்ளார்
அதாவது இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அன்றைய தினம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் படபிடிப்பை விறுவிறுப்பாக முடித்து இந்த ஆண்டு இறுதியிலே இந்த படத்தை வெளியிட தனுஷ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.