மூன்றாவது நாளில் பெரும் சரிவை சந்தித்த தனுஷின் ‘இட்லி கடை’ பட வசூல்!

vinoth
சனி, 4 அக்டோபர் 2025 (10:08 IST)
தனுஷ் இயக்கத்தில் உருவான நான்காவது படமாக ‘இட்லி கடை’ நேற்று கடந்த புதன் கிழமை ஆயுதபூஜை அன்று ரிலீஸானது.  தனுஷுடன் நித்யா மேனன், ஷாலினி பாண்டே, சத்யராஜ், அருண் விஜய் மற்றும் பார்த்திபன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்க படத்தை டான் பிக்சர் தயாரிக்க, ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளராக கிரண் கௌஷிக் பணியாற்றினார்.

குடும்ப செண்டிமெண்ட், இட்லி கடை எமோஷன், பள்ளிப் பருவ காதல், என சிம்பதி எமோஷனல் டிராமாவாக உருவாகியுள்ள ‘இட்லி கடை’ திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்த துயர சம்பவம் மற்றும் அது சார்ந்த அரசியல் சர்ச்சைகளால் இந்த படத்துக்கு பெரியளவில் ஓப்பனிங் கிடைக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

முதல் நாளில் இந்தியளவில் சுமார் 11 கோடி ரூபாயும், இரண்டாம் நாளில் சுமார் 10 கோடி ரூபாயும் வசூலித்த இந்த பட்ம் மூன்றாம் நாளான நேற்று 40 சதவீத சரிவை சந்தித்து 6 கோடி ரூபாய் அளவிலேயே வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. படத்துக்கு எழுந்த கலவையான விமர்சனங்களும், காந்தாரா 1 படத்துக்குக் கிடைத்து வரும் அபரிமிதமான ஆதரவும் இந்த படத்தின் வசூலில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆர்.ஜே. பாலாஜியின் அடுத்த படம்: இந்த பிரபல நடிகர் தான் ஹீரோவா?

மாரி செல்வராஜ் - இன்பநிதி' படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போகிறதா? என்ன காரணம்?

கரூர் சம்பவ காட்சிகள் ‘ஜனநாயகன்’ படத்தில் வருகிறதா? தீயாய் பரவும் வதந்திகள்..!

மாடர்ன் உடையில் அசத்தும் மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

சேலையில் சிக்கென்ற போஸில் அசத்தும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

அடுத்த கட்டுரையில்
Show comments