Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷின் ஹாலிவுட் படத்துக்கு புதிய சிக்கல்… தள்ளிப் போகும் படப்பிடிப்பு!

Webdunia
சனி, 26 டிசம்பர் 2020 (10:45 IST)
தனுஷ் நடிக்க இருந்த ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

The Gray Man எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், ரையான் கோஸ்லிங், க்ரிஸ் இவான்ஸ், ஜெஸ்ஸிகா ஹென்விக் மற்றும் அர்மா டி அனாஸ் உள்ளிட்ட ஹாலிவுட் நட்சத்திரங்கள் நடிக்கும் இந்தப் படத்தில், தனுஷும் நடிக்க உள்ளார். நெட்பிளிக்ஸின் மிகப் பிரம்மாண்டமான தயாரிப்பாக உருவாகும் இந்த படத்தின் அறிவிப்பை காலையில் நெட்பிளிக்ஸ் வெளியிட்டது. அதையடுத்து தனுஷுக்கு பல தரப்பிலும் இருந்து வாழ்த்து மழை பொழிந்தது. இதற்கு முன்னர் தனுஷ் 2018ல் வெளிவந்த The Extraordinary Journey of the Fakir படத்தின் மூலம் ஹாலிவுட்டிற்கு அறிமுகமானவர். The Gray Man அவரது இரண்டாவது ஹாலிவுட் திரைப்படமாக இருக்கும்.

இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடக்க இருந்த நிலையில் இப்போது அங்கு கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் படப்பிடிப்பை நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் அந்த படத்துக்கு தனுஷ் கொடுத்த தேதிகளை அப்படியே கார்த்திக் நரேன் படத்துக்குக் கொடுத்துள்ளாராம். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 5 ஆம் தேதி தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’சர்தார் 2’ படத்தின் 3 நிமிட வீடியோ.. மாஸ் ஆக்சன் காட்சிகள்..!

’மேலிடத்து உத்தரவு’.. தனுஷுக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட ஃபைவ் ஸ்டார் நிறுவனம்..!

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

குக் வித் கோமாளி சீசன் 6 எப்போது? புதிய கோமாளிகள் பங்கேற்பார்களா?

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments