Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேப்டன் மில்லர்: ஹேப்பி மோடில் தனுஷ்… விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு!

Webdunia
திங்கள், 10 அக்டோபர் 2022 (16:49 IST)
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார்.

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான ராக்கி கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி பொதுவாக நல்ல விமர்சனங்களையே பெற்றது. இதையடுத்து அவர் செல்வராகவனை வைத்து இயக்கிய திரைப்படமும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் அவர் தனது மூன்றாவது படத்தை இயக்க உள்ளார். 

இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ள நிலையில் இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். படப்பிடிப்பு விரைவில் தென்காசியில் தொடங்க உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் பூஜை சென்னையில் நடந்துள்ளது. அதில் தனுஷ், பிரியங்கா மோகன் மற்றும் சந்தீப் கிஷன் ஆகியோருடன் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அதையடுத்து தென்காசியில் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. இதுவரை எடுத்தக் காட்சிகளை போட்டு பார்த்த மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளாராம். விரைவில் படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் சென்னையில் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யார்ரா அந்த பொண்ணு? சச்சின் ரீரிலீஸால் திடீரென வைரல் ஆகும் இந்த நடிகை யார்?

டப்பா ரோல் பண்றதுக்கு.. ஆண்ட்டி ரோல் எவ்வளவோ மேல்! - சிம்ரன் ஆவேசம்!

கமல், ரஜினி, விஜய்யால் தள்ளிப்போன ‘கைதி 2’.. இப்போது அஜித்தால் தள்ளி போகிறதா?

சூரி எவ்வளவு அடிச்சாலும் தாங்கக் கூடிய ஆள்! வெற்றிமாறன் நகைச்சுவை! - மண்டாடி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

’ஜனநாயகன்’ படத்தை வாங்க ஆளில்லையா? வாங்குவதற்கு போட்டியா? இன்னும் வியாபாரம் ஆகவில்லை

அடுத்த கட்டுரையில்
Show comments