Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தி கிரே மேன் டிரைலர் பார்த்து அப்செட் ஆன தமிழ் ரசிகர்கள்… இதுதான் காரணமா?

Webdunia
புதன், 25 மே 2022 (12:25 IST)
நேற்று தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் தி கிரே மேன் திரைப்படத்தின் டிரைலர் வெளியானது.

அவெஞ்சர்ஸ் இயக்குனர்களின் நெட்பிளிக்ஸ் திரைப்படமான ’தி கிரே மேன்’ என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ள நான்கு முக்கிய நட்சத்திரங்களில் தனுஷும் ஒருவர் என்ற அறிவிப்பு வெளிவந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

தி கிரே மேன் படத்தில் தனுஷ் நடித்து வரும் கதாபாத்திரம் குறித்த விபரங்களை எழுத்தாளர் மார்க் கிரேனி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, இந்த படத்தில் ரயான் காஸ்லிங், கோர்ட் ஜென்ட்ரி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரை கொலை செய்ய நினைக்கும் குழுவின் தலைவனாக தனுஷ் நடிக்கிறார் என்று அவர் கூறியுள்ளார். 

சமீபத்தில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. ஜூலை 22 ஆம் தேதி அந்த திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் படத்தில் தனுஷின் கதாபாத்திரம் தொடர்பான ஸ்டைலான புகைப்படமும் வெளியானது. இந்நிலையில் இந்த படத்துக்காக தனி எமோஜியை தற்போது டிவிட்டர் வெளியிட்டுள்ளது. இது சம்மந்தமான அறிவிப்பு தற்போது பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.

இதையடுத்து நேற்று படத்தின் டிரைலர் வெளியானது. முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டு இருந்த இந்த டிரைலர் ரசிகர்களைக் கவர்ந்தது. ஆனால் தமிழ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிருப்தியாக அமைந்தது, டிரைலரில் தனுஷ் சில வினாடிகள் மட்டுமே இடம்பெற்றதுதான். மிகச் சில வினாடிகளே தனுஷின் கதாபாத்திரம் டிரைலரில் தோன்றுவதால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிருப்தியாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு - வெற்றிமாறன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? லேட்டஸ்ட் அப்டேட்..!

’பரியேறும் பெருமாள்’ படத்தின் நாயகனாக இவர் தான் நடித்திருக்க வேண்டும்: மாரி செல்வராஜ்

அஜித் - ஆதிக் இணையும் ‘ஏகே 64’ படத்தின் நாயகி இவர் தான்: தயாரிப்பாளர் யார் தெரியுமா?

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் கிளிக்ஸ்!

பிங்க் நிற உடையில் ஜொலிக்கும் அதிதி ஷங்கர்… க்யூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments