Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவெஞ்சர்ஸ் இயக்குனரின் அடுத்த படத்தில் தனுஷ்!

Webdunia
வெள்ளி, 18 டிசம்பர் 2020 (07:48 IST)
அவெஞ்சர்ஸ் இயக்குனரின் அடுத்த படத்தில் தனுஷ்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் பாலிவுட்டிலும் திரைப்படங்கள் நடித்து வருகிறார் என்பதும் ஏற்கனவே இரண்டு திரைப்படங்கள் பாலிவுட்டில் அவர் நடித்து முடித்துள்ள நிலையில் தற்போது ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் ’Atrangi Re’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தில் அக்ஷய்குமார் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே 
 
மேலும் கோலிவுட், பாலிவுட் மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் அவர் ஒரு படம் நடித்துள்ளார் என்பதும் The Extraordinary Journey of the Fakir என்ற டைட்டிலில் ஹாலிவுட்டில் வெளியான இந்தப் படம் தமிழில் பக்கிரி என்ற டைட்டிலில் வெளி ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது அவெஞ்சர்ஸ் இயக்குனரின் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் இயக்குனர்களின் அடுத்த படம் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்காக தயாரிக்கப்பட உள்ளது
 
’தி க்ரே மேன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஹாலிவுட் நடிகர்களுடன் முக்கிய வேடத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவிருக்கிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்துள்ளது. தனுஷுடன் கிரிஸ் எவன்ஸ், ரியான் கோஸ்லிங் மற்றும் அன டே ஆர்மஸ் ஆகியோர் இந்த படத்தில் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது தமிழ் ஹிந்தி மட்டுமன்றி ஹாலிவுட்டிலும் மீண்டும் கால் வைத்துள்ள தனுசுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments