Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாலிவுட் பட ஷூட்டிங்கில் தனுஷ்,…வைரலாகும் புகைப்படம்

பாலிவுட் பட ஷூட்டிங்கில் தனுஷ்,…வைரலாகும் புகைப்படம்
, புதன், 16 டிசம்பர் 2020 (16:24 IST)
நடிகர் தனுஷ், அக்‌ஷய் குமார் மற்றும் சாரா அலிகான் ஆகியோர் நடித்துள்ள அத்ராங்கி டே படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் தனுஷ், சாரா அலிகான் ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ராஞ்சனா என்ற படத்தின் மூலம் தனுஷ் பாலிவுட்டில் அறிமுகமானார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

அதன் பின்னர் அவர் ஷமிதாப் என்ற படத்தில் அமிதாப்புடன் இணைந்து நடித்தார். அந்த படம் தோல்வி அடைந்ததை அடுத்து பாலிவுட்டுக்கு ஒரு இடைவெளி விட்டார் தனுஷ். இந்நிலையில் சில வருட இடைவெளிக்குப் பின் மீண்டும் பாலிவுட் படம் ஒன்றில் நடிக்கிறார் தனுஷ்.

இந்த படத்தை அவரது முதல் படத்தை இயக்கிய ஆனந்த் எல் ராய் இயக்குகிறார். இந்த படத்தில் தனுஷுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் அக்‌ஷ்ய் குமார் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் மதுரையில் நடைபெற்றது. அதையடுத்து இப்போது இறுதிக் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடக்கிறது. இம்மாத இறுதி வரை படப்பிடிப்பு நடக்க உள்ளது. அத்துடன் மொத்த படப்பிடிப்பும் முடிகிறது.

இந்நிலையில், அத்ராங்கி டே  பட ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் தனுஷ், சாரா அலிகான் ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் படமும் ஹூட்டிங் முடிந்துள்ளதால், போஸ்ட் புரொடொக்சன் வேலைகள் துவங்கியுள்ளன.

webdunia

அடுத்து தனுஷ் நடிப்பில், அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் புதுப்பேட்டை,  காதல் கொண்டேன், மயக்கம் என்ன, ஆகிய  படங்களுக்குஒப் பிறகு இருவரும் மீண்டும் இணையவுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது..@dhanushkraja #SaraAliKhan #AtrangiRe


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித் சுதா கொங்கரா படத்தின் உறுதியற்ற தன்மை – துண்டு போடும் முன்னணி இயக்குனர்!