Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேப்டன் மில்லரில் 3 தனுஷ்… மாஸ் ஆடியன்ஸுக்கான கதை… இயக்குனர் அருண் மாதேஸ்வரன் அப்டேட்!

Webdunia
திங்கள், 4 ஜூலை 2022 (10:33 IST)
தனுஷ் நடிப்பில் அடுத்த படமாக கேப்டன் மில்லர் உருவாகி வருகிறது. இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார்.

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான ராக்கி கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி பொதுவாக நல்ல விமர்சனங்களையே பெற்றது. இதையடுத்து அவர் செல்வராகவனை வைத்து இயக்கிய திரைப்படமும் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் அவர் தனது மூன்றாவது படத்தை இயக்க உள்ளார். 

இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ள நிலையில் இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோஷன் போஸ்டர் தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. படத்துக்கு மதன் கார்க்கி வசனங்களை எழுத, ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார்.

படத்தில் தனுஷ் 3 விதமான கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும், ஒரு கதாபாத்திரத்தின் 15 ஆண்டுகால வாழ்க்கையை சொல்லும் திரைக்கதை என்றும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் தெரிவித்துள்ளார். தனது முந்தைய இரு படங்களைப் போல இல்லாமல் மாஸ் ஆடியன்ஸுக்கான கதையாக இந்த திரைப்படம் உருவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

குபேரா படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த நாகார்ஜுனா!

அனுஷ்காவின் போஸ்டரால் 40 விபத்துகள் நடந்தன… இயக்குனர் கிரிஷ் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments