Publish Date: Sun, 03 Jul 2022 (15:55 IST)
Updated Date: Sun, 03 Jul 2022 (15:25 IST)
விஷ்ணு விஷால் அமலாபால் நடித்த ராட்சசன் திரைப்படத்தை 2018 ஆம் ஆண்டு ராம்குமார் இயக்கினார்
இந்த படம் சூப்பர் ஹிட்டான நிலையில் அவருடைய அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்ற நிலையில் திடீரென இந்த படம் டிராப் ஆனது என்று செய்திகள் வெளியானது
இந்த நிலையில் விஷ்ணு விஷால் நடிப்பில் ராட்சசன் 2 படத்தை இயக்க ராம்குமார் முடிவு செய்திருப்பதாகவும் இந்த படத்திலும் அமலா பால் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது
படத்தை விஷ்ணு விஷால் தனது விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
முதல் பாகம் போலவே இரண்டாவது பாகத்திலும் அதிரடி திகில் காட்சிகள் இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்