Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படம்… எதிர்பார்ப்பை ஏற்படுத்திய போஸ்டர்!

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும்  புதிய படம்… எதிர்பார்ப்பை ஏற்படுத்திய போஸ்டர்!
, சனி, 2 ஜூலை 2022 (10:43 IST)
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான ராக்கி கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி பொதுவாக நல்ல விமர்சனங்களையே பெற்றது. இதையடுத்து அவர் செல்வராகவனை வைத்து இயக்கிய திரைப்படமும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் அவர் தனது மூன்றாவது படத்தை இயக்க உள்ளார். 

இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ள நிலையில் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று இந்த படம் சம்மந்தமாக புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் இன்று மாலை படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் எனவும் அந்த போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு கேப்டன் மில்லர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும், வரலாற்றுப் பின்னணியில் இந்த திரைப்படம் உருவாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உடலில் துணியே இல்லாமல் விஜய் தேவரகொண்டா… லைகர் படத்தின் புதிய போஸ்டர்!