Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

vinoth

, செவ்வாய், 7 மே 2024 (15:12 IST)
சமீபகாலமாக பழைய படங்களின் ரி ரிலீஸ் அதிகளவில் நடந்து வருகிறது. புதுப்படங்களின் வரவேற்புக் குறைவாக உள்ள நிலையில் சென்னையின் பிரபல திரையரங்குகள் இதுபோல பழைய படங்களை ரி ரிலீஸ் செய்கின்றனர். புது படங்கள் ஓடாததுதான் இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் ரசிகர்கள் பழைய படங்களுக்கு நல்ல வரவேற்பைக் கொடுத்து வருகின்றனர் என்பதே அதிக படங்கள் ரி ரிலீஸ் ஆகக் காரணம்.

சமீபத்தில் ஆளவந்தான், வேட்டையாடு விளையாடு, புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன், அஜித்தின் வாலி  ஆகிய திரைப்படங்கள் ரி ரிலீஸ் செய்யப்பட்டு எதிர்பார்த்ததை விட அதிகமான வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றன. இவற்றில் உச்சமாக விஜய்யின் கில்லி திரைப்படம் ரி ரிலீஸில் 20 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது.

இந்நிலையில் அடுத்து பல படங்கள் ரி ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. அதில் குறிப்பிடத் தகுந்த படங்களாக சூர்யாவின் கஜினி மற்றும் தனுஷின் தேவதையைக் கண்டேன் ஆகிய திரைப்படங்கள் விரைவில் ரி ரிலீஸ் ஆகவுள்ளதாக சொல்லப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!