Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அஜித்தின் தீனா & பில்லா பட ரி ரிலீஸ் வசூல் எவ்வளவு?

அஜித்தின் தீனா & பில்லா பட ரி ரிலீஸ் வசூல் எவ்வளவு?
, சனி, 4 மே 2024 (17:07 IST)
சமீபகாலமாக பழைய படங்களின் ரி ரிலீஸ் அதிகளவில் நடந்து வருகிறது. புதுப்படங்களின் வரவேற்புக் குறைவாக உள்ள நிலையில் சென்னையின் பிரபல திரையரங்குகள் இதுபோல பழைய படங்களை ரி ரிலீஸ் செய்கின்றனர். புது படங்கள் ஓடாததுதான் இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் ரசிகர்கள் பழைய படங்களுக்கு நல்ல வரவேற்பைக் கொடுத்து வருகின்றனர் என்பதே அதிக படங்கள் ரி ரிலீஸ் ஆகக் காரணம்.

இந்நிலையில் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு மே 1 ஆம் தேதி அவரின் தீனா மற்றும் பில்லா ஆகிய இரு படங்களும் தமிழகத்தில் ரி ரிலீஸ் ஆகின. இந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்புக் கிடைத்துள்ளது. ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி இவ்விரு படங்களையும் பார்க்கும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

இந்த இரு படங்களும் முதல் நாளில் 1 கோடி ரூபாய் மற்றும் 83 லட்சம் ஆகிய தொகையளவுக்கு வசூலித்ததாம். ஆனால் அடுத்தடுத்த நாட்களில் வசூல் பெரியளவுக்கு இல்லையாம். சரியாக பப்ளிசிட்டி பண்ணி ஒரே படத்தை ரிலீஸ் செய்திருந்தால் ரசிகர்கள் பெரிய அளவில் ஆதரவு கிடைத்திருக்கும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யானையை விட்டு சிங்கத்தைப் பிடித்துக் கொண்ட பிரபு சாலமன்.. பிரபல தயாரிப்பாளரோடு கூட்டணி!