விமானப் படை அதிகாரியாக நடிக்கும் தனுஷ்… தேரே இஷ்க் மெய்ன் ஸ்டில் ரிலீஸ்!

vinoth
சனி, 7 ஜூன் 2025 (10:27 IST)
தமிழ் மொழியில் தனது நடிப்பு திறமையால் இரண்டு தேசிய விருதுகளை வென்ற தனுஷ் பாலிவுட்டிலும் கால்பதித்தார்.  2013 ஆம் ஆண்டு ராஞ்சனா படத்தின் மூலம் இந்தியில் அறிமுகம் ஆனார். இந்த படத்தை ஆனந்த் எல் ராய் இயக்கி இருந்தார். அதன் பின்னர் சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்த கூட்டணி அத்ராங்கி ரே படத்தில் இணைந்தது.

இந்நிலையில் மூன்றாவது முறையாக தனுஷ்- ஆனந்த் எல் ராய்- ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி இணைந்துள்ளது. ராஞ்சனா வெளியாகி 10 ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில் “தேரே இஷ்க் மேய்ன்” என்ற படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். இந்த படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியிடப்பட்டாலும் தற்போதுதான் ஷூட்டிங் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் தனுஷ் விமானப் படை அதிகாரியாக நடிப்பதாக தகவல் வெளியானது. அதை உறுதிப்படுத்துவது போல தற்போது தனுஷ் விமான அதிகாரியின் சீருடையில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரீனாவை காப்பாற்றினாரா தந்தை விஜய்? 'ஹார்ட் பீட் - 2' இணையத்தொடர் இன்றுடன் நிறைவு..!

ஊதித் தள்ள நான் மண் அல்ல.. மலை..! கவனம் ஈர்த்த காந்தா பட ட்ரெய்லர்!

12 ஆண்டுகளுக்கு பிறகு கம்பேக் கொடுக்கும் ரோஜா! சிறப்பு வீடியோவை வெளியிட்ட படக்குழு

வித்தியாசமான டிசைனர் ஆடையில் அசத்தல் போஸ் கொடுத்த அதுல்யா ரவி!

கூந்தலலை காற்றிலாட க்யூட் போஸ் கொடுத்த க்ரீத்தி ஷெட்டி!

அடுத்த கட்டுரையில்
Show comments