Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

''மஞ்சும்மல் பாய்ஸ் ''இயக்குநரின் அடுத்த படத்தில் தனுஷ்?

''மஞ்சும்மல் பாய்ஸ் ''இயக்குநரின் அடுத்த படத்தில் தனுஷ்?

Sinoj

, செவ்வாய், 5 மார்ச் 2024 (22:55 IST)
மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ள நிலையில்,  இப்படத்தின் இயக்குனர் சிதம்பரம் அடுத்து இயக்கவுள்ள படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி   ரிலீஸான இப்படத்தை சிதம்பர்ம எஸ் கொடுவால் இயக்கியுள்ளார்.  சவுபின் ஷாயிர், ஸ்ரீ நாத் பாஷி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  சுஷின் ஸ்யாம் இசையமைத்துள்ளார்.
 
ஏற்கனவே இப்படத்தை உதயநிதி ஸ்டாலின், தனுஷ், கார்த்திக் சுப்புராஜ், வெங்கட்பிரபு  உள்ளிட்டோர் பாராட்டியுள்ளனர்.
 
இப்படம் மொழி கடந்து அனைவரும் வரவேற்றுள்ளனர். சனி, ஞாயிற்றுக்கிழமையில் இப்படம் தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் மட்டும் 850 காட்சிகள் ஓடியுள்ளதாக கூறப்படுகிறது.
 
மொழியைக் கடந்து இப்படத்தை அனைவரும் கொண்டாடி வருவதால் இப்படம் வசூல் குவித்து வருகிறது. இப்படக்குழுவினரின் திறமையை  பலரும் பாராட்டி வருகின்றனர்.
 
இந்த  நிலையில்,  மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளதாக இப்படத்தின் இயக்குனர் சிதம்பரம் தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  மேலும், இதனை சாத்தியமாக்கிய ரசிகர்கள் குறிப்பாக தமிழ் ரசிகர்களுக்கு  நன்றி என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார். 
 
இந்த நிலையில்,  மஞ்சும்மல் பட இயக்குனரின் அடுத்த படத்தை தமிழ் சினிமா தயாரிப்பாளர் ராகுல் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியான நிலையில், சிதம்பரம் நடிகர் தனுஸை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார் என கூறப்படுகிறது.

அதன்படி, மதுரை  அன்பு இன்று இயக்குனர் சிதம்பரத்தை அழைத்து அட்வான்ஸ் கொடுப்பதாக கூறப்பட்ட நிலையில், மதுரை அன்புவுக்கும், தனுஷுக்கும் இடையே கமிட்மண்ட்ஸ் உள்ளதால் தனுஷ் அவருக்கு ஒரு படம் நடித்த்க் கொடுக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் அவர் மலையால சினிமாவிலும் சிதம்பரம் கமிட் ஆகலாம் என தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் விஷால் பேச்சால் அதிர்ந்த கல்லூரி வளாகம்.!