பிளான கேட்டாலே தலை சுத்துது! கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க தனுஷ்.. ஓடி வந்த சாய்பல்லவி

Webdunia
சனி, 22 நவம்பர் 2025 (13:42 IST)
தனுஷ் தற்போது தான் நடித்த ஹிந்தி படமான தேரே இஸ்க் மெயின் திரைப்படத்தின் புரமோஷனில் பிசியாக இருக்கிறார். தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகராக கருதப்படுபவர் தனுஷ். தமிழ் மட்டுமல்ல தெலுங்கு ஹிந்தி ஹாலிவுட் என இவருடைய புகழ் உலக அளவில் ஓங்கி நிற்கின்றது. சமீபத்தில் கூட பிரபல கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்ஸனுடன் ஏர் ஹாக்கி விளையாட்டை விளையாடினார் தனுஷ்.
 
அந்த வீடியோ வைரலாகி ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்தன.  இந்த நிலையில் தனுஷின் அடுத்தடுத்த வேலைகள் என்னென்ன? எந்த படத்தில் நடிக்க போகிறார் என்பது பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹிந்தியில் பட புரோமோஷனை முடித்துவிட்டு 24ஆம் தேதியிலிருந்து போர் தொழில் பட இயக்குனர் இயக்கும் படத்தில் இணைய இருக்கிறார் தனுஷ்.
 
ஏற்கனவே அந்தப் படத்தின் பாதி படப்பிடிப்பு முடிந்த நிலையில் இன்னும் 20 நாட்கள் படப்பிடிப்பு இருக்கிறதாம். அதனால் இந்த மாதம் 24 ஆம் தேதியில் இருந்து அடுத்த மாதம் 15 ஆம் தேதி வரைக்கும் தன்னுடைய கால் சீட்டை கொடுத்திருக்கிறாராம் தனுஷ். அதை முடித்துவிட்டு ஒரு வாரம் கழித்து உடனே ராஜ்குமார் பெரியசாமி உடன் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட அந்தப் படத்தில் நடிக்க இருக்கிறாராம்.
 
அந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார். சாய்பல்லவி தற்போது ராமாயணம் படத்தில் பிசியாக இருக்கிறார். ராமாயணம் படத்தின் படப்பிடிப்பு முடியும் வரை வேறு எந்த படத்திலும் நடிக்க மாட்டேன் என்று உறுதியாக இருந்த சாய்பல்லவி தனுஷ் நடிக்கும் படத்திற்கு மட்டும் உடனே ஓகே கூறியிருக்கிறார். அதற்கு காரணம் ராஜ்குமார் பெரியசாமி தனுஷ் இணையும் இந்த படம் ஆரம்பத்திலேயே ஒப்பந்தம் செய்யப்பட்ட படம்.
 
அதனால் அதை தவிர்க்க முடியாது என்ற காரணத்தினால் சாய்பல்லவி நடிக்க வருகிறேன் என்று சொல்லிவிட்டாராம். தனுஷை பொருத்தவரைக்கும் சினிமா நடிப்பு இது மட்டுமே அவருடைய குறிக்கோளாக இருக்கிறது. வேறு எதிலும் அவர் கவனம் செலுத்தவில்லை.ஏற்கனவே சாய்பல்லவியும் தனுஷும் மாரி 2 படத்தில் இணைந்து நடித்தனர். அதன் பிறகு இந்தப் படத்தில்தான் இணைகிறார்கள்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கத்தரிப்பூ நிற சேலையில் கலக்கல் புகைப்படங்களை பகிர்ந்த அனிகா!

பைசன் நாயகி அனுபமாவின் அட்டகாசமான புகைப்படத் தொகுப்பு!

ஏ ஆர் ரஹ்மானை ‘Outdated’ என சொன்னாரா கவின்?- பிரபலம் பகிர்ந்த தகவல்!

ஆண்ட்ரியாவின் வீடு பத்திரமாக இருக்கும் என நம்புகிறேன் – மாஸ்க் படத்தின் ரிசல்ட் குறித்து கவின்!

ப்ரோமோ ஷூட்டோடு படத்தை ஆரம்பிக்கும் ‘சூர்யா 47’ படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments