Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் ரசிகர்களின் ஆதரவை ஓப்பனாக கேட்ட தமிழக அமைச்சர்

Advertiesment
விஜய் ரசிகர்களின் ஆதரவை ஓப்பனாக கேட்ட தமிழக அமைச்சர்
, திங்கள், 26 மார்ச் 2018 (22:06 IST)
இளையதளபதி விஜய் ரசிகர்கள் கடந்த தேர்தலின்போது ஜெயலலிதாவுக்கு ஆதரவு கொடுத்தது போல தங்களுக்கும் ஆதரவு கொடுக்க வேண்டும் என தமிழக அமைச்சர் தங்கமணி ஓப்பனாக கேட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர் விஜய் பிறந்த நாள் ஜுன் 22ஆம் தேதி கொண்டாடவிருக்கும் நிலையில் இப்போது முதல் அவரது ரசிகர்கள் நலத்திட்டங்களை வழங்கி வருகின்றனர்

அந்த வகையில் நாமக்கல்லில் நடைபெற்ற விஜய் பிறந்த நாள் முன்னிட்டு நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் மின்சார துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் மற்றும் நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சுந்தரம், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

webdunia
இந்த விழாவில் பேசிய அமைச்சர் தங்கமணி, 'ஜெயலலிதா முதலமைச்சர் ஆவதற்கு ஆதரவு தெரிவித்த விஜய் ரசிகர்கள், தற்போதும் தங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொண்டார். ரஜினி, கமல் இருவருமே தமிழக அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் விஜய் ரசிகர்களை அதிமுக வளைக்க திட்டமிடுவதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குரங்கணி தீ விபத்து: பலி எண்ணிக்கை 21ஆக உயர்வு